Advertisement

👇கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும்👇
>>
மேல்நிலை 2ம் ஆண்டு துணைத்தேர்வெழுதிய தேர்வர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு!!

ஆகஸ்ட் 2021, மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத்தேர்வெழுதிய தேர்வர்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு உட்பட தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை / மதிப்பெண் பட்டியல்களை 25.11.2021 ( வியாழக்கிழமை ) முதல், அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம் என சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும், மேல்நிலை முதலாம் ஆண்டு (600 மதிப்பெண்கள்) மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வுகளுக்கான (600 மதிப்பெண்கள்) மதிப்பெண் சான்றிதழ்கள் (Mark Certificates) தனித்தனியே வழங்கப்படும்.

பழைய நடைமுறையில் (1200 மதிப்பெண்கள்) நிரந்தர பதிவெண் (Permanent Register Number) கொண்டு தேர்வெழுதிய மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வர்கள், இதற்கு முந்தைய பருவங்களில் தேர்ச்சி பெறாத பாடங்களை, ஆகஸ்ட் 2021 துணைத் தேர்வில் எழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பின், அவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்களும், முழுமையாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண்களை மட்டும் பதிவு செய்து மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

நிரந்தர பதிவெண் இல்லாமல் (மார்ச் 2016 பொதுத் தேர்விற்கு முன்னர்) மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வெழுதிய தேர்வர்கள், தற்போது ஆகஸ்ட் 2021 பொதுத் தேர்வெழுதி இருப்பின், அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண்கள் மட்டும் பதிவு செய்து மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
முக்கியக் குறிப்பு:

1. மதிப்பெண் சான்றிதழ்களை / மதிப்பெண் பட்டியல்களைப் பெற்றுக் கொள்ள தேர்வு மையத்திற்கு வருகை தரும் தேர்வர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

2. தேர்வு மையத்தில் தேர்வர்கள் சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்றுதல் வேண்டும். இவ்விதம் அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் விடுமுறை கிடையாது - ஆட்சியர்

தொடர்ந்து பல்வேறு நாட்கள் கோவை முழுவதும் பலத்த மழை பெய்து கொண்டிருந்த நிலையில் சற்று மழை பொழிவு குறைந்துள்ளதால் ரெட் அலர்ட் நீக்கப்பட்ட நிலையில் இன்று நவம்பர் 18ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் விடுமுறை கிடையாது என்று கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
திங்கள் முதல் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை

கட்டுப்படுத்தமுடியாத காற்று மாசின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. திங்கள்கிழமை (நவ.15) முதல் ஒரு வார காலத்திற்கு பள்ளிகள் மூடப்படுவதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.

இருப்பினும் வகுப்புகள் இணையவழியில் நடைபெறும் எனவும் பள்ளிக் குழந்தைகள் அசுத்தமான காற்றை சுவாசிப்பதைத் தடுக்கவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
NEET - தேர்வு விடைத்தாள் நகல்! நாளை கடைசி தேதி இன்றே டவுன்லோட் செய்யுங்கள்!! லிங்க் இதோ...!!!

நீட் தேர்வு விடைத்தாள் நகல் மின்னஞ்சல் மூலம் கிடைக்காதவர்கள் நாளைக்குள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியீல் பயன்படுத்தி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் நாளை கடைசி(நவ.14-க்குள்) நாள் என்பதால் முடிந்தவரை இன்றே டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

https://neet.nta.nic.in/

மாணவர்கள் நவ.14-ம் தேதி இரவு 9 மணிக்குள் பதிவிறக்கம் செய்யலாம்.

தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பும் மேற்கண்ட வலைதளத்தில் உள்ளது. ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
இந்த மாவட்டங்களில் இன்று (நவ. 12) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தமிழகத்தில் இன்று (நவ. 12) தொடர்ந்து கனமழை பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பகுதியில் பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு
--------------------------------------
சென்னை,
காஞ்சிபுரம்,
திருவள்ளூர்,
செங்கல்பட்டு,
திருவண்ணாமலை,
நீலகிரி,
வேலூர்,
கன்னியாகுமரி

பள்ளிகளுக்கு மட்டும்
--------------------------
கடலுார்,
விழுப்புரம் ,
ராணி பேட்டை,
சேலம்,
கள்ளக்குறிச்சி,
தர்மபுரி (1 முதல் 8 வகுப்பு வரை)
கிருஷ்ணகிரி, (1 முதல் 5 வகுப்பு வரை)
திருப்பத்தூர் (1 முதல் 5 வகுப்பு வரை)

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
மாணவர்களுக்கு குட் நியூஸ்! தேர்வுகளில் புதிய வழிமுறைகள் அறிமுகம்!

சிபிஎஸ்இ முதல் பருவ தேர்வு வரும் நவம்பர் 16ம் தேதி துவங்குகிறது. இந்த முறை தேர்வில் சில புதுமைகள் செய்யப்பட்டுள்ளன.

* தேர்வு நேரம் 90 நிமிடம். மல்டிபிள் சாய்ஸ் முறையில் 60 கேள்விகள் கேட்கப்படும்.

* ஓ.எம்.ஆர். ஷீட்டில் விடையளிக்க வேண்டும். ஏ, பி, சி, டி என நான்கு ஓவல் வடிவ வட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். சரியான விடைக்கான ஓவல் வடிவத்தை பால்பாயிண்ட் பேனா மூலம் நிரப்ப வேண்டும்.

* ஏ, பி, சி, டி அருகே ஐந்தாவதாக சதுர வடிவ கட்டம் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும். ஒருவேளை தவறாக பதில் அளித்ததாக மாணவர் உணர்ந்தால், சரியான விடையை சதுர கட்டத்தில் எழுதலாம். உதாரணமாக, 'ஏ'க்கு பதில் 'பி' தான் சரி என நினைத்தால் 'பி' என சதுர கட்டத்தில் எழுதினால் போதும்; மதிப்பீடு செய்யும்போது இதை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வர்.

* விடை அளிக்க தவறும் பட்சத்தில், அதனை சம்பந்தப்பட்ட கேள்விக்கு நேரே உள்ள வரிசையில் குறிப்பிட வேண்டும்.

* தேர்வு முடிந்ததும் அன்றைய தினமே தேர்வு மையத்தில் ஓ.எம்.ஆர். ஷீட் திருத்தப்பட உள்ளது. மதிப்பெண் விவரம் அப்லோடு செய்யப்படும். பின்னர், அந்தந்த மண்டல அலுவலங்களுக்கு ஓ.எம்.ஆர். ஷீட் அனுப்பி வைக்கப்படும்.

* விடைத்தாள் திருத்தும் முறை பற்றிய வீடியோ, ஓ.எம்.ஆர். ஷீட் மாதிரியை ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் விரைவில் பகிர்ந்துகொள்ள உள்ளது

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
இன்று கனமழையால் 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை, அரியலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தஞ்சை, பெரம்பலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
பள்ளி பாடத்திட்டங்களில் பருவநிலை மாற்றம்!!

பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்த பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, பருவநிலை மாற்றத்தால், இந்தியா போன்ற வளரும் நாடுகள் வேளாண் துறை மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. திடீரென பெய்யும் மழை, வெள்ளம் காரணமாக பயிர்கள் சேதமடைகின்றன. பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு கிடைக்கும் முக்கியத்துவம் அதை மேம்படுத்துவதற்கு செய்ய வேண்டிய மாற்றங்களுக்கு கிடைப்பதில்லை.

அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காக பள்ளி பாடத்திட்டங்களில் பருவநிலை மாற்றம் குறித்த பாடங்களை இணைக்க வேண்டிய அவசியம் இப்போது எழுந்துள்ளது. 2070ஆம் ஆண்டில் இந்தியாவில் கார்பன் உமிழ்வு பூஜ்ஜியமாக இருக்கும். உலக மக்கள் தொகையில் 17 % பேர் இந்தியாவில் இருந்தாலும் உலக அளவில் வெளியேற்றப்படும் மொத்த கார்பன் உமிழ்வு 5 %மட்டும்தான். பருவநிலை மாற்றத்துக்கான அனைத்து சாத்தியங்களையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது. சுற்றுச்சூழலுக்கு ஏற்ப வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வது உலகளாவிய இயக்கமாக மாற வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
கனமழை காரணமாக இன்று பள்ளி விடுமுறை!! எந்தஎந்த மாவட்டம் தெரியுமா?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக பெரம்பலூர், திருவண்ணாமலை, அரியலூர், விழுப்புரம். கடலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, காஞ்சிபுரம், கொடைக்கானல் ஆகிய மாவட்டங்களிலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

நடிகர் சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் சார்பில் பழங்குடி இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்காக 1.கோடி ரூபாய்யை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் வழங்கப்பட்டது. நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தில் பழங்குடி இருளர் இன மக்களின் வாழ்வியல் நெருக்கடிகள் பேசப்பட்ட நிலையில் தற்போது சூர்யா ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 85 of 86 )   NEXT |  LAST